மக்களுக்கு எந்த நேரத்திலும் உணர்வுப்பூர்வமான சேவையில் நாம் - ஜீவன் தொண்டமான்
கூட்டு ஒப்பந்தம் இல்லாத காலத்தில் தான் அதன் முக்கியம் என்ன என்பது நிறையப் பேருக்குப் புரிகிறது என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தோட்டங்களில் கம்பெனிகள் மூலம் பல்வேறு தவறுகள் நடந்துகொண்டிருக்கிறது. இதெல்லாம் தட்டி கேட்டுக்கொண்டு தான் இருக்கிறோம். இப்போது கூட்டு ஒப்பந்தம் இல்லை. ஆனாலும் இந்த காலப்பகுதியிலும் கடந்த சில மாதங்களாக இன்னும் தனியா தான் பண்ணிக்கொண்டிடருக்கின்றோம்.
அதே விஷயத்தில் மாற்று தொழிற்சங்கத்தை எடுத்தால் அவர்கள் என்ன சேவை செய்துள்ளார்கள் மக்களுக்கு? கூட்டு ஒப்பந்தம் இருக்கும்போது அது ஒரு அடிமை சாசனம். அது மக்களை அடிமைத்தனத்துக்கு உள்ளாகிறது எனச் சொன்ன நபர்கள் எல்லாருமே இப்போது அமைதியாக இருக்கிறார்கள்.
கூட்டு ஒப்பந்தம் இல்லாத காலத்தில் தான் அதன் முக்கியம் என்ன என்பது நிறையப் பேருக்குப் புரிகிறது. கூட்டு ஒப்பந்தம் எல்லாரையும் கட்டுப்படுத்துகிறது, மக்களைக் கஷ்டப்படுத்துகிறது என வதந்திகளை அப்போது பரப்பினார்கள். ஆனால் இப்போது அதன் முக்கியத்துவம் எல்லோருக்கும் புரிகிறது.
மேலும் நாங்கள் மக்களுக்கு எந்த நேரத்திலும் உணர்வுப்பூர்வமாகவே வேலை செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.