தமிழர்களின் இனவிகிதாசாரத்தை குறைப்பதற்கு ஜனாதிபதி வழங்கியுள்ள ஆலோசனை - சார்ள்ஸ் நிர்மலநாதன்
தேருநர்களை பதிவு செய்வது ஒரு மாகாணத்துக்கு அப்பால் இருக்கின்ற இன்னொரு மாகாணத்தில் இருக்கிற தமிழர்களின் இனவிகிதாசாரத்தை குறைப்பதற்குப் பயன்படுத்துவது அல்லது அவர்களை அந்த பிரதேசத்தை ஆள முடியாமல் செய்வதற்கு எடுக்கின்ற நடவடிக்கையாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் நாடாளுமன்றில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று அந்த தேருநர்களை பதிவு செய்வது என்பது குறிப்பாக வடமாகாணத்தில் எவ்வளவு தாக்கத்தை அதாவது தமிழர்களின் இன விகிதாச்சாரம் எவ்வளவு குறைக்கப்பட்டது என்பது தொடர்பில் கூற விரும்புகிறேன்.
தேருநர்களை பதிவு செய்து ஒரு மாகாணத்துக்கு அப்பால் இருக்கின்ற இன்னொரு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிராம அலுவலர் பிரிவை வடமாகாணத்துக்கு இணைக்கின்ற செயற்பாட்டிற்கு தற்போதைய ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
இவ்வாறு பதிவு செய்வது இன்னொரு மாகாணத்தில் இருக்கிற தமிழர்களின் இனவிகிதாசாரத்தை குறைப்பதற்குப் பயன்படுத்துவது அல்லது அவர்களை அந்த பிரதேசத்தை ஆளமுடியாமல் செய்வதற்கு எடுக்கின்ற நடவடிக்கையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri