மூன்று ஆண்டுகளில் நாற்பதாயிரம் வேலைவாய்ப்பு! - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் உறுதி

India Protest Parliament Douglas devananda
By Sudaron Jul 20, 2021 09:30 PM GMT
Report

தமிழ் மக்களுக்குப் புலிப் பூச்சாண்டி காட்டி அரசியல் செய்தவர்கள் தற்போது சீனப் பூச்சாண்டியைக் காட்டித் தங்களுடைய போலி அரசியலைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சித்து வருவதாகவும், உள்ளூர் உற்பத்திகளில் சார்ந்திருக்கும் பொருளாதாரத்தினை உருவாக்கும் வகையிலே கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், கடலட்டை போன்ற நீர் வேளாண்மைச் செயற்பாடுகளை வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் விஸ்தரித்து, அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 40,000 நேரடி வேலை வாய்ப்புக்களையும் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட அந்நியச் செலாவணியைப் பெற்றுக் கொள்வதையும் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதாகவும் கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராகப் பிரதான எதிர்க் கட்சிகளினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,


எரிபொருள் விலையேற்றம் என்பது அமைச்சர் உதயகம்மன்பிலவின் தனிப்பட்ட தீர்மானம் அல்ல. இந்தத் தீர்மானம் தற்போதைய அரசாங்கத்தின் கூட்டுத் தீர்மானமாகும். எனவே, நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது நேரத்தையும் மக்களின் வரிப் பணத்தினையும் வீண் விரயமாக்கும் செயலாகும்.

ஒரு நாட்டின் எரிபொருள் விலையேற்றமானது, அந்நாட்டின் அனைத்துப் பொருட்களினதும் விலையேற்றத்துக்குக் காரணமாகும் என்பதை நான் புதிதாகக் கூறித் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

எமது நாடு இன்று பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியதொரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலைப்பாடானது எமது நாட்டுக்கு மாத்திரம் நிகழ்ந்துள்ளதொரு நிலையல்ல. கோவிட் - 19 அனர்த்த நிலை காரணமாக முழு உலகமே இன்று பொருளாதார நிலையில் பாரிய பாதிப்புகளைக் கண்டு வருகின்றன.

கடந்த ஆட்சியின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கையானது எமது நாட்டுக் கஜானாவைத் துடைத்து வைத்திருந்த நிலையில்தான் நாம் இந்த கோவிட் - 19 அனர்த்தத்திற்கும் முகங்கொடுக்க வேண்டிய நிலையேற்பட்டது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.

இத்தகைய நிலைமைகளின் முன்பாக எமது மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில், எரிபொருளின் விலையேற்றமானது மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்த கதையைப் போன்றதாகிவிட்டது என்பதை ஏற்றுக் கொள்ளவே வேண்டும்.

அதேநேரம், எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது கடற்றொழிலாளர்கள் தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதையும் இந்த நாட்டின் கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

அதேவேளை, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் துறைசார் அமைச்சர் உதயகம்மன்பில் ஆகியோருடன் கலந்துரையாடி 35 ரூபாயினால் அதிகரிக்கப்பட இருந்த மண்ணெண்ணெய்யின் விலையை 7 ரூபாயினால் மாத்திரமே அதிகரிக்கச் செய்துள்ளோம்.

இலங்கையானது எரிபொருளுக்கென மிக அதிகளவிலான அந்நிய செலாவணியைச் செலவிடுகின்ற ஒரு நாடு மட்டுமல்ல, எரிபொருள் மூலமாக போக்குவரத்து சேவைகள், மின்சார உற்பத்தி, கைத்தொழில் நிலையங்கள் போன்றவற்றைச் செயற்படுத்துகின்ற ஒரு நாடாகவும் உள்ளது.

இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற எமது நுகர்வுக் கலாச்சாரத்தை உற்பத்திகள் மீது தங்கியிருக்கக் கூடிய நுகர்வுக் கலாச்சாரமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். சுபிட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனம் முதற்கொண்டு, இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் வரை இந்த நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தையே வலியுறுத்தியுள்ளன.

அதனையே நாம் செயற்படுத்தி வருகின்றோம். கடற்றொழில் அமைச்சர் என்ற வகையில், இயன்றளவில் கடற்றொழிலையும் நன்னீர் சார்ந்த வேளாண்மைத் துறைகளையும் மேலும் மேலும் பரவலாக வளர்த்தெடுத்து உற்பத்திப் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கின்ற நடவடிக்கைகளை இடைவிடாது மேற்கொண்டு வருகின்றேன்.

சாதிக்கத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் கூட இடுப்பளவு நீராகும். போதிக்க மட்டும் தெரிந்தவனுக்கு இடுப்பளவு நீரும் சமுத்திர நீராகவே தென்படும். கடந்த ஆட்சிக்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி தமிழ் மக்களின் தலைகள் மீது மிளகாய் அரைத்தவர்கள் எதைச் சாதித்தார்கள்? அடிக்கல் நாட்ட வந்த ஆட்சியாளர்களைக் கண்டவுடன் குனிந்து கும்பிட்டுப் பல்லிளித்து மட்டும் நின்றார்கள்.

ஒவ்வொரு வரவு செலவு திடத்தை ஆதரித்து வாக்களிக்கும் போதும் பணப்பெட்டிகளை வாங்கிக்கொண்டு பெட்டிப்பாம்புகளாக கைகட்டி அடங்கிக்கிடந்தார்கள். இந்தவிறகுக் கட்டை விடுதலை வீரர்கள், கிளிநொச்சி புலி நொச்சியாக இருந்த காலத்தில் 75 கள்ள வாக்குகளைப் போட்டதாக ஒப்புக்கொண்டார்கள்.

அவ்வாறான ஒரு அரசியல்வாதியாக நான் ஒருபோதும் எமது மக்களை ஏமாற்றப் போவதில்லை. அந்தவகையில், அனைத்து உற்பத்தித் துறைகளும் மேலோங்கும் நிலை விரைவில் ஏற்பட வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.

அதேநேரம், மாற்று எரிபொருட்கள் தொடர்பிலும் எமது அரசு அதிக அவதானம் செலுத்தி வருகின்றது. எரிபொருள் விலையேற்றம் காரணமாக எமது நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுதான் வருகின்றன.

கடந்த பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் மூன்று தடவைகள் அங்கு எரிபொருள் விலை ஏற்றப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் இந்தியா பெற்றோலிய எரிபொருள் மற்றும் உள்நாட்டு எதனோல், உயிரி இயற்கை எரிவாயு திரவ இயற்கை எரிவாயு மற்றும் ஹைட்ரஜன் எரிபொருட்கள் அடங்கிய இயற்கை எரிபொருளைக் கொண்ட கலப்பு பிளக்ஸ் இயந்திரங்களின் பாவனையை வாகனங்களுக்கென ஊக்குவித்து வருகின்றது.

இந்த முறைமையானது தற்போது அமெரிக்கா, கனடா, பிரேசில் போன்ற நாடுகளில் பாவனையில் உள்ளது. அவை தொடர்பாகவும் நாம் எதிர்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கடற்றொழில் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, அரியாலை, மகோ, Kurunegala

15 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு, கனடா, Canada

14 Jan, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, சிட்னி, Australia

12 Jan, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம்

11 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, Toronto, Canada

13 Jan, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டிருப்பு, காரைதீவு, மட்டக்களப்பு, London, United Kingdom

13 Jan, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US