இராணுவத்தரப்பினரை தொற்றை கட்டுப்படுத்த நியமித்த காரணத்தால் அரசு படுதோல்வியை சந்தித்துள்ளது - செல்வராசா கஜேந்திரன்
வைத்தியத்துறை சார்ந்தவர்களை முதன்மைப்படுத்தாமல் தொற்று தொடர்பான எந்தவித அறிவுமற்ற இராணுவத்தரப்பினரை இந்த தொற்றைக் கட்டுப்படுத்துகின்ற செயலணிக்கு பொறுப்பாக நியமித்த காரணத்தினாலே தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் தனது நாடாளுமன்ற உரையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இது மட்டுமல்லாமல் அரசிடமுள்ள இனவாத சிந்தனைகளும் இந்த தோல்விக்கு ஒரு பிரதான காரணமாகவுள்ளது.
இதன் காரணமாக இந்த தொற்றானது சமுகப்பரவலடைந்து உள்ளது என்பதை அரசு ஏற்றுக்கொள்கிறதா என்பது ஒரு கேள்வியாகவுள்ளது.
கோவிட் பெருத்தொற்றை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் அரசு வடகிழக்கில் இனவாதமாகவே நடந்து கொள்கிறது.
தொற்று ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் கடந்துள்ளபோதும் கூட வடக்கு, கிழக்குப் பகுதியில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள், தாதியர்கள், மருத்துவ ஆய்வுகூட உதவியாளர்கள், சுகாதார தொண்டர்கள் போன்றோருக்கான பற்றாக்குறையை நிரப்ப அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.