போர்ட்சிட்டிக்காக வேண்டி நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினை விற்று குளிர்காய்ந்து விடாதீர்கள் - முஸம்மில் மொஹிதீன்
தமிழ்பேசும் மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் போர்ட் சிட்டி விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் அரசுக்குச் சார்பாக வாக்களித்தால் தமிழ் பேசும் சமூகத்தின் முன்னால் வர இருக்கும் சமூகத்துக்குச் செய்யும் ஒரு பாரிய சமூகத்துரோகம் எனத் தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
போர்ட்சிட்டி சட்டமூலம் தொடர்பாகக் கேட்ட போதே ஊடகங்களுக்கு அவர் இன்று(20) இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
விசேடமாக முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயவு செய்து உங்கள் தற்சமய அடைவுகளைச் சிந்திக்க வேண்டாம். நீங்கள் யாவரும் தன்னிறைவு பெற்றவர்களே.
ஆகவே உங்களை நம்பி வாக்களித்த எம் சமூகத்தின் 20 வருடங்களுக்கு முன்னால் வர இருக்கும் சமூகத்தைப் பற்றிச் சிந்தித்து உங்கள் கைகளை உயர்த்துவதிலிருந்து தவிர்த்துக்கொள்ளுங்கள்.
போர்ட்சிட்டிக்காக வேண்டி நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினை விற்றுக் குளிர்காய்ந்து விடாதீர்கள், பரந்து வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் அப்பாவி முஸ்லிம்களை இக்கட்டான நிலைக்கு ஆக்கி விட முயற்சிக்க வேண்டாம்.
இந்த சீன நாட்டின் போர்ட்சிட்டி பிரவேசம் என்பது எமது சமூக சர்வதேச வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து ஒழிந்துவிடும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். நாட்டில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் வியாபாரிகளை அவர்களின் சொத்துக்களை முடக்கி ஆளுவதான ஒரு செயற்பாடு தான் போர்ட்சிட்டியில் காணப்படுகின்றது.
சில முஸ்லிம் அரசியல் வங்குரோத்துகாரர்கள் போர்ட்சிட்டியால் நன்மை என்றார்கள். அரசாங்கத்தின் அற்ப சுகபோகங்களுக்காக இவர்கள் முஸ்லிம் சமூகத்தினை விற்க முனைகின்றார்கள் என்பது புலனாகின்றது.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சரியான சமூக சிந்தனையுடைய நாட்டு மற்றும்
சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
