புலம்பெயர் தமிழர்களின் ஆலோசனையில் ஐ.நா அறிக்கை! உறக்கத்தில் உயர்ஸ்தானிகர் - ஜயந்த வீரசிங்க
சட்ட அடிப்படைகளை மீறிச் செயற்பட்ட முன்னைய அரசாங்கத்தின் மிக மோசமான செயற்பாடுகள் குறித்த விடயங்கள் ஜெனிவாவில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு தெரிந்திருக்கவில்லை. அவர் உறக்கத்திலிருந்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ஜனாதிபதியான காலத்திலிருந்து இந்த நாட்டை ஆராய்ந்து பார்த்துள்ளனர். எனினும் முன்னைய அரசாங்கம் சட்டவிரோதமாக வெறுக்கத்தக்க வகையில் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபட்ட நிலையில் அது தொடர்பில் ஒரு வார்த்தையேனும் ஜெனிவா மனித உரிமை அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை.
சட்ட அடிப்படைகளை மீறிச் செயற்பட்ட முன்னைய அரசாங்கத்தின் மிக மோசமான செயற்பாடுகள் குறித்த விடயங்கள் ஜெனிவாவில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு தெரிந்திருக்கவில்லை.
அவர் உறக்கத்திலிருந்துள்ளார்.
எனவே இவ்வறிக்கை உறக்கத்தில் எழுதப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
