நாடாளுமன்ற நடவடிக்கைகளை முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்வதை தடை செய்யுமாறு நாமல் ராஜபக்ச பரிந்துரை
நாடாளுமன்ற நடவடிக்கைகளை முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பும் அரச மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு தடை செய்யப்பட வேண்டுமென அமைச்சர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே நாமல் ராஜபக்ச இந்த கோரிக்கையினை சபாநாயகரிடம் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்பினால், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்ப ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லையெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூத்தவர்களாக அல்லது இளையவர்களாக இருந்தாலும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சபையின் நடவடிக்கைகளை முகப்புத்தகத்தில் நேரடியாக ஒளிபரப்புவது அரசாங்கத்திற்கும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு தீவிரமான பிரச்சினை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சபையில் சட்டங்கள் மற்றும் நிலையான கட்டளைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரியமுறையில் கடைப்பிடிக்க வேண்டும்.நாடாளுமன்ற அமர்வில் அல்லது நாடாளுமன்ற நுழைவாயிலில் சண்டையிடுவதை எந்த நிலையிலும் அங்கீகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
