காத்தான்குடியில் புனரமைக்கப்படாத பள்ளிவாசலை சிறுவர்கள் பார்த்தால் இன்னமும் சஹ்ரான்கள் உருவாகும் வாய்ப்புள்ளது – எஸ்.வியாழேந்திரன்

batticaloa viyalanderan kathankudy
By Kumar Apr 21, 2021 08:18 PM GMT
Report

காத்தான்குடியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தில் குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப்பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் தான் மாறுவார்கள். இன்னமும் சஹரான்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு – செங்கலடி, புலையவெளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏப்ரல்21 குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த கால அரசாங்கத்திலே இந்த குண்டுவெடிப்பு நடப்பது தொடர்பாக ஏற்கனவே சொல்லப்பட்டது. சில அரசியல் வாதிகளுக்குத் தெரிந்திருந்தது. சில அரசியல்வாதிகளின் பாதுகாவலர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் வெளிப்படுத்தவில்லை. அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.

சஹரான் என்பவர் திடீர் என உருவாகியவர் அல்ல. ஒரு சில மதத் தலைவர்களும், ஒரு சில அரசியல் தலைவர்களுடைய உணர்ச்சியூட்டக்கூடிய பேச்சுக்கள், ஒரு இனத்திற்கு எதிராக ஒரு மதத்திற்கு எதிராக, சமூகத்திற்கு எதிராக வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுக்கள் நடவடிக்கைகள் தான் இவ்வாறானவர்கள் உருவாக காரணம்.

ஐ.எஸ்.எஸ் பயங்கரவாதிகளின் அடிப்படை நோக்கமே ஒரு இஸ்லாமிய அரசை உருவாக்குவது. 90களிலே காத்தான்குடியில் இடம்பெற்ற ஒருசம்பவத்திலே குண்டு தாக்கப்பட்ட பள்ளிவாசல் இன்னமும் புனரமைக்கப்படாமல் உள்ளது. அந்த இடத்திற்குச் செல்லுகின்ற சிறுவர்கள், இளைஞர்கள் அவற்றைப் பார்க்கும் போது இன்னமும் உணர்வு தூண்டப்பட்டு வன்முறையாளர்களாகத் தான் மாறுவார்கள், இன்னமும் சஹரான்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் அப்பாவிகள் மாட்டிக்கொள்கிறார்கள். அப்பாவிக் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. சில மதத்தலைவர்களுடைய பேச்சுக்கள் ஒரு இனத்தை உணர்ச்சியூட்டி இன்னொரு இனத்திற்கு எதிராகத் தற்கொலைக் குண்டு தாரியாக மாறுமளவிற்குக் கொண்டு செல்கிறது.

நாடாளுமன்றத்தில் சில அரசியல் தலைவர்கள் பேசிய பேச்சுக்களும் இதற்குக் காரணமாக அமைந்துள்ளது. வடகிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும், இது ஒரு தனி தாயகம் என்றெல்லாம் பேசினார்கள்.

இவ்வாறான பேச்சு தான் வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு ஒரு உணர்வை ஊட்டி அது இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக மாறுகிறது. மீண்டும் இவ்வாறான ஒரு துன்பியல் சம்பவம், அவல நிலைமை ஏற்படக்கூடாது. இந்த அரசாங்கம் இது தொடர்பில் அதி தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி, நியாயம் நிலை நாட்டப்பட வேண்டும். என தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US