இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்:ரணிலுக்கு பெருகும் ஆதரவு
எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துக்கொள்ள உள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக ஒவ்வொரு நாளும் மாவட்ட மட்டத்திலும் உள்ளுராட்சி மட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகள் திரண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மொனராகலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் குழுவும் கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவுடன் பலர் இணைவு
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவிற்கு வருகை தரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி எதிர்வரும் சில தினங்களில் மேலும் பலர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து கொள்ள உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிலேயே அதிகபட்ச விலை.. துரந்தர் ஓடிடி உரிமை வாங்கிய நெட்பிலிக்ஸ்! புஷ்பா 2 சாதனையை தகர்த்தது Cineulagam
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
பிரித்தானிய ஏவுகணையை பயன்படுத்திய உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் News Lankasri