தன் குற்றங்களை மூடி மறைக்க எத்தனிக்கும் அரசாங்கம் ஜனநாயக நாடு என்ற கோட்பாட்டை முற்றாக இழந்து வருகிறது - முஸம்மில் மொஹிதீன்
இலங்கையின் தேய்பிறை ஜனநாயகம், இலங்கையில் அராஜக ஆட்சி கட்டவிழ்த்துத் தலைவிரித்து ஆடும் நிலையில் தன் குற்றங்களை மூடி மறைக்க முழு பூசனிக்காயைச் சோற்றில் புதைக்க எத்தனிக்கும் அரசாங்கம் ஜனநாயக நாடு என்ற கோட்பாட்டை முற்றாக இழந்து வருகிறது எனத் தேசிய விடுதலை மக்கள் முன்னணியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று(24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பெற்ற நாள் தொடக்கம் அநியாயமான அரசியல் கைதுகள் பல நாமத்தில் செய்து வரும் கொடூர ஜனநாயக மீறல் இந்த நாட்டு மக்களை ஒரு பாரிய வீழ்ச்சியில் கொண்டு சேர்க்கும் என்பதை நன்கு அறிந்த அரசாங்கம் வேண்டும் என்றே அதைச் செய்வது ஒரு வேடிக்கையான விடயமே!
இன்று ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தை வைத்து ஜனநாயக மீறலுக்கு எதிர்ப்பாகக் குரல் கொடுத்து வரும் சிறந்த நாட்டுப் பற்றுள்ள அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் ப்ரொவிஸன் ஒவ் டெரரிஸ்ட் ஆக்ட் (provision of terrorist act) (PTA) கொடூரமான முறையில் கைது செய்து அவர்களைப் புலனாய்வு பிரிவில் மாதக்கணக்கில் டிடென்ட் ஆர்டர் (detained order) (DO) இல் தடுப்புக்காவலில் வைத்திருக்கும் அபாயகரமான அரசியல் நாட்டில் நடை பெறுவது இதுவே முதல் தடவையாகக் காணக்கூடியதாக உள்ளது.
இந்நிலை தொடர்வதால் சர்வதேசம் இலங்கையை முறட்டு கண்கொண்டு பார்க்க ஆரம்பித்துள்ளது என்பதற்கு வெளிப்படையான சாட்சி பகிர்தலே கடந்த ஐக்கிய நாட்டு மனித உரிமை வாக்கெடுப்பில் இலங்கை படுதோல்வி தழுவியது.
இந்த தொடர்ச்சியான சர்வதேச அரைக்கண் பார்வை நீடித்தால் இலங்கை மக்களால் தம் நாட்டில் வாழ முடியாத அபாக்கிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
இன்று(24) அதிகாலை தேசிய கட்சியொன்றின் தலைவரை அநியாயமாக எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி சபாநாயகரிடமும் அறிவிக்காமல் கைது செய்தமையானது தமிழ் பேசும் சமூகத்தை அடக்கும் செயற்பாடாகும்.
இதனை எமது கட்சி வண்மையாகக்
கண்டிக்கின்றது என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில்
சுட்டிக்காட்டிடப்பட்டுள்ளது.