சீற்றம் கொண்டு பொங்கியெழுந்த இளைஞர்கள்! மகிழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி
காலிமுகத் திடலில் நடைபெற்று வரும் இளைஞர், யுவதிகளின் போராட்டம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
இளைஞர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தான மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். இளைஞர்கள் மிக அழகான முறையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனை பார்க்கும் போது பிரஞ்சு புரட்சி நினைவுக்கு வருகிறது எனவும் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றிடம் ஒளிப்பரப்பான பேட்டி நிகழ்ச்சியில் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை இளைஞர்களின் இந்த போராட்டத்திற்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் விமுக்தி குமாரதுங்கவை அரசியலுக்கு கொண்டு வருவீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி , விமுக்திக்கு அதற்கு நேரமில்லை.
விமுக்தியை அரசியலுக்குள் கொண்டு வருமாறு பலர் என்னிடம் கோரிக்கை விடுக்கின்றனர். எனினும் விமுக்திக்கு அரசியலில் ஈடுபடும் எவ்வித விருப்பமும் இல்லை என தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா மற்றும் இலங்கை மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜய குமாரதுங்க ஆகியோரின் புதல்வரான விமுக்தி குமாரதுங்க, இங்கிலாந்தில் வசித்து வருவதுடன் அவர் கால்நடை மருத்துவராக சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.