அரசியல் தந்திரோபாயங்கள் உரிய நேரத்தில் எடுக்கப்படும்! - ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு
அரசியல் தந்திரோபாயங்கள் உரிய நேரத்தில் எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. அத்துடன், ரணில் விக்கிரமசிங்க சரியான நேரத்தில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“புத்தாண்டுக்குப் பிறகு, ஐக்கிய தேசியக் கட்சியின் நடவடிக்கைகள் அனைவருக்கும் தெரியும்.
இந்த ஆண்டு மே தினத்தில் இளைஞர் மாநாட்டை நடத்தவும் கட்சி செயற்குழு முடிவு செய்துள்ளது.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
