நாட்டில் என்ன நடக்கும், எப்போது நடக்கும்? என்று எவருக்கும் தெரியாத நிலை! றிசாட் தெரிவிப்பு

corona virus colombo vavuniya rishad bathiudeen
By Independent Writer Apr 13, 2021 05:51 PM GMT
Report

இந்த நாட்டில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? என்று எவருக்கும் தெரியாத அச்சமான சூழலை அரசு ஏற்படுத்தியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று விஜயம் செய்த அவர் பல்வேறு கிராமங்களிற்குப் பயணம் செய்து மக்களைச் சந்தித்தார்.

இதன்பின்னர் ஊடகங்களிற்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எப்படியாவது என்னைச் சிறையிலே அடைக்க வேண்டும் என்று எத்தனையோ பொய் குற்றச்சாட்டுக்கள், முறைப்பாடுகளைச் செய்தும் பலன் கிடைக்காத போது, மன்னாருக்கு வாக்காளர்களைப் பேருந்தில் அழைத்துச்சென்ற விடயத்தை முன்னிறுத்தி என்னைச் சிறையிலேயே அடைத்தார்கள். அதன்பிறகும் தொடர்ச்சியான சதிகளை இந்த அரசு செய்துகொண்டேயிருக்கின்றது.

குறிப்பாக கோவிட் தொற்று நோயினால் இறப்பவர்களின் சடலங்களைப் பலவந்தமாக எரிக்கும் சதியினை இந்த அரசாங்கம் செய்தது. எமது கருத்துக்களையும், மக்களின் வேதனைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

ஜெனிவாவால் அந்த விடயம் இடைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு தமிழ்பேசும் சமூகம் சார்ந்து பேசுபவர்களின் குரல்களை நசுக்கும் சதி நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த மாதம் அசாத் சாலியை கைது செய்தார்கள். அதேபோல அரசாங்கத்தின் பிழையான நடவடிக்கைகளை எதிர்த்துப் பேசுகின்ற அசல சம்பத் என்கின்ற சிவில் அமைப்பைச் சேர்ந்தவரைக் கைது செய்திருப்பதாக அறிகிறேன்.

இந்த நாட்டில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? யாருக்கு நடக்கும்? என்ன செய்வார்கள் என்பது தெரியாது.

அனைவரும் ஒரு பயந்த சுபாவத்தோடு வாழவேண்டும் என்று இந்த அரசு அச்சத்திலே வைத்திருக்கின்றது. கொழும்பைவிட்டுச் செல்லமுடியாத அளவிற்குப் பலவகையான தொல்லைகள் எங்களிற்கு வழங்கப்பட்டது.

அந்தவகையில் நான் சிறையிலிருந்தபோது எனக்காக மன்றாடிய அனைத்து மக்களுக்கும் நான் நன்றியுள்ளவனாகக் கடமைப்பட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US