மிக விரைவில் ஜனாதிபதி, பிரதமரை சந்திக்க தயாராகும் ஆளும் கட்சியின் பின்வரிசை எம்.பிக்கள்
அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பொறுப்பை தமக்கும் வழங்குமாறு ஆளும் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டங்களில் சில திட்டங்களை ஆரம்பிக்கும் போது அது குறித்து குறித்து மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தெளிவுப்படுத்துவமில்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் பின்வரிசையை சேர்ந்த இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர், சிரேஷ்ட அமைச்சர்கள் சிலரை சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மிக விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்தித்து இவர்கள் தமது பிரச்சினைகளை முன்வைக்க தயாராகி வருகின்றனர்.
இதனை தவிர அரசாங்கம் எடுக்கும் சில தீர்மானங்கள் குறித்து ஆளும் கட்சியின் தரப்பினர் என்ற வகையில், தமக்கு தெரியப்படுத்துவதில்லை எனவும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.