பொருளாதார நெருக்கடி காரணமாக தமக்கும் பல்வேறு பிரச்சினைகள்: மனம் திறந்த அரசியல்கைதி (Photos)
பொருளாதார நெருக்கடி காரணமாக அரசியல் கைதிகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட அரசியல் கைதியொருவர் தெரிவித்துள்ளார்.
வழக்கொன்றிற்காக வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு இன்று மூன்று அரசியல் கைதிகள் ஆயுதம் தாங்கிய காவலர்கள் சகிதம் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
தமிழ்மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோள்
இந்நிலையில் வழக்கு நிறைவின் பின்னர் அவர்களை மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லும் பொருட்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், பொருளாதார நெருக்கடியால் அரசியல் கைதிகளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதனால் தமிழ் மக்கள் அனைவரும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகக் குரல் கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.