உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி!
கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் (வயது 64) என்பவர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனக்கு பிணை அனுமதி பெற ஆவணசெய்துதவுமாறு கோரி நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது மேன்முறையீட்டு வழக்குகள் தொடர்பாகவும் தனது உடல் நிலை தொடர்பாகவும் குறிப்பிட்டு கடந்த டிசம்பர் மாதம் 17ம் திகதி சிறைச்சாலை ஆணையாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன் தான் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பும் மேலதிக வைத்திய சிகிச்சையும் இல்லாமல் தான் தொடர்ந்தும் சிறைக்குள் அடைபட்டிருப்பதில் அர்த்தமில்லை. இதனால் தான் உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே மேற்படி தனது கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தை சிறையில் இருந்து ஆரம்பித்துள்ளார் என அவரது உறவுகளால் குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam