தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்களை பாதுகாக்க களத்தில் இறங்கவுள்ள அரசியல் கட்சி
தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தமதுர் கட்சி நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைப்புகள்
கடற்றொழிலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களது படகுகள், மீன்பிடி வலைகள், பிடிக்கப்பட்ட மீன்கள் மற்றும் அத்தியாவசிய தொழில் கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கிறது.
இது, தமிழக கடற்றொழிலாளர்களின் கடலில் இறங்கும் உரிமையை மறுக்கும் அட்டூழியமாக தீவிரமாகி வருகிறது.
இந்தநிலையில் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலை, ஒன்றிய அரசு தலையிட்டு தடுக்க வேண்டும் என கடற்றொழில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசும் முதலமைச்சரும் கடற்றொழில் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்று கோரி, ஒன்றிய அரசுக்கும் பிரதமர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோருக்கும் கடிதம் வழியாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
ஆனால், இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதலை வாய்மூடி மௌனியாக இருந்து வேடிக்கை பார்த்து வருவது, நாட்டின் இறையாண்மை கொள்கைக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.
எனவே இனியும் தமிழ்நாட்டு மக்கள் அமைதி காக்க முடியாது என்கிற கொந்தளிப்பான நிலை உருவாகி வருகிறது.
இதனையடுத்து, ஜனநாயக சக்திகளையும், ஒத்த கருத்துடைய அமைப்புகளையும் அணி திரட்டி, கட்சி நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கம்யூனிஸக்கட்சியின் தமிழ்நாட்டு மாநிலச் செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
