மைத்திரியை இலக்கு வைத்து அரசியல் சூழ்ச்சி! தயாசிறி வெளியிட்ட தகவல்
நல்லாட்சி அரசாங்கத்தின் போது மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்ததன் பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து சூழ்ச்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அப்போது சேவையாற்றிய புலனாய்வு பிரிவினரை இலக்கு வைக்கின்றனர்.
சஹ்ரானுடைய தொலைபேசி பாகத்தை (Mother Board) யார் எடுத்தது என்பது தொடர்பில் எவரேனும் கருத்து தெரிவித்தார்களா ? இந்த தொலைபேசி பாகத்தை எடுப்பதற்கு பொலிஸார் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் , அதனை வெளிநாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையே முதலில் ஆராய வேண்டும். அது தொடர்பில் ஆராய்ந்தால் மாத்திரமே பிரதான சூத்திரதாரிகளை இனங்காண முடியும். அதனை விடுத்து முன்னாள் ஜனாதிபதியையும் , அமைச்சர்களையும் குறைகூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த விடயம்.
அவருக்கு எதிராக அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 12 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
