கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள்: ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு
கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்ராலின் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று (18.12.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், தற்போது நாம் காண்கின்றோம் கிழக்கு மாகாணத்தில் கல்வி சம்பந்தமாக அரசியல் தலையீடுகள் வர வர அதிகரித்துக் கொண்டு செல்கின்றது, விசேஷமாக பாடசாலைகளில் அதிபர்கள் நியமனங்களில் பிரச்சினை நிலவுகின்றது நாங்கள் காண்கின்றோம்.
அதிபர்கள் வெற்றிடம்
பாடசாலைகளில் அதிபர்களை நியமிக்கிறதான 9328 சுற்றறிக்கை அதன்படி பாடசாலைகளில் அதிபர்கள் வெற்றிடம் வந்தால் அது தொடர்பாக முறையாக விண்ணப்பங்கள் கூறப்பட்டு அதற்கான நேர்முகத் தேர்வு வைக்கப்பட்டு முறையாக தேர்வு செய்ய வேண்டும் அவ்வாறு இல்லாமல் சில பாடசாலைகளில் அதிபர் நியமனம் வழங்கிக் கொண்டு செல்கின்றார்கள் இது ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.
இதில் ஒரு கட்சி மாத்திரமல்ல பல கட்சிகள் செயல்படுகின்ற இந்த கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் தேவையான மாதிரி அவர்களுடைய பிரதேசங்களில் அதிபர் நியமனங்களில் கையிடுவதை நாங்கள் அதிகளவாக காண்கின்றோம் விசேடமாக தேசிய பாடசாலைகளிலும் இந்த விடயங்கள் நடப்பதை நாங்கள் காண்கின்றோம்.
கல்வி அமைச்சுக்கு சென்று அழுத்தங்களை கொடுத்து அவர்களுக்கு தேவையான அதிபர்களை
கொண்டு வந்து பாடசாலைகளுக்கு வைக்கின்றார்கள். இந்த நிலையில் அதிபர்கள்
நியமனத்திற்கான முறைகளுக்கு என்ன நடக்கின்றது. அதனால் முறையாக பாடசாலைகளுக்கு
அதிபர் வெற்றிடங்களுக்கு செல்ல இருக்கின்றவர்களுக்கு பிரச்சினைகளாக
மாறுகின்றது. இதனை உடனடியாக நிறுத்த வேண்டிய செயற்பாடாகவே நாங்கள்
பார்க்கின்றோம்.
அத்தோடு தற்போது அதிபர் நியமனம் இலங்கை அதிபர் சேவை தரம் 3 நியமனங்கள் 4672 கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதில் கிழக்கு மாகாணத்திற்கு 487 பேர் நியமித்துள்ளனர். வடமகாணத்திற்கு 259 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது பரீட்சைகளில் மூலம் வந்த நியமனம். இந்த நியமனம் வந்து அவர்களுக்கு உரிய பாடசாலைகள் வழங்கும் போது இதில் கூட முறையான செயற்பாடுகள் இல்லை இதிலும் நாங்கள் காண்கின்றோம்.
தேசிய பாடசாலை நியமனம்
தேசிய பாடசாலை நியமனம் வழங்கும் போது ஒரு மாதிரியும் மாகாண சபைக்கு நியமனம் வழங்கும்போது இன்னும் ஒரு மாதிரியும் இதில் அரசியல் தலையீடுகள் மூலம் நியமனங்கள் வழங்குவது முறையா அதிபர் சேவை போட்டி பரிட்சையில் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய நியமனம் வழங்கும்போது அந்த நியமனம் வழங்கும் முறையான செயல்பாடு இல்லாமல் இருக்கும் போது ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் தேவையான மாதிரி அதிபர்களை நியமிப்பது சாதாரண உள்ளதா. நாங்கள் பார்க்கின்றோம்.
அந்த நியமனங்கள் பெறுபவர்கள் தொடர்பாக ஒரு பிரச்சினைகள் காணப்படுகின்றது. விசேஷமாக 486 நியமனங்கள் சம்பந்தமாக கிழக்கு மாகாணத்தில் முறையான ஒரு செயல் திட்டம் அவசியம். அதைப்போல வடமாகணத்திலும் இந்த செயல் திட்டம் அவசியம் இந்த செயல் திட்டம் கல்வி அமைச்சினாலும் செய்யவில்லை நாங்கள் காண்கின்றோம்.
கிழக்கு மாகாணத்தில் ஒவ்வொரு அரசியல்வாதியும் அவர்களுக்கு தேவையான அவர்களுக்கு உரிய இடங்களில் அதிபர்கள் நியமனத்தில் இவ்வாறு செயல்படுவது பிழையான செயல்பாடாக நாங்கள் பார்க்கின்றோம். இதற்கு உடனடியான தீர்வு அவசியம்.
அத்தோடு கல்வி தொடர்பாக சமமான செயற்பாடு அவசியம் பாடசாலைகளில் வளங்கள் வழங்குவதில் பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் வழங்குவது தொடர்பான செயல்பாடுகளில் இவற்றில் கூட அரசியல்வாதிகள் பின் சென்று இதில் செயல்படுவதனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை சில பாடசாலைகளில் மழையின் காரணமாக தண்ணீர் உள்ளது அதிகரித்துள்ளது.
பாடசாலைகளை கொண்டு நடத்துவதில் சிரமம் உள்ளது. அவற்றிற்கு உடனடியாக செயல்படாமல் அரசியல்வாதிகள் பின்னால் சென்று செய்ய வேண்டிய பாரிய பிரச்சினைகள். இதனால் நாங்கள் கூறுகின்றோம்.
இவற்றிற்கு முறையான தீர்ப்பு அவசியம் அத்துடன் எங்களுக்கு தெரியும் கடந்த நாட்களில் பாடசாலையில் ஒரு மாணவி இறந்து போனது இத்தோடு கல்வி அமைச்சினால் முழு இலங்கையிலும் பாடசாலைகளுக்கு கட்டடங்கள் அபாயமான கட்டிடங்கள் அபாயகரமான செயற்பாடுகளுக்கு புதிய கட்டடங்கள் செய்வதற்கும் அது தொடர்பாக செயல்படுவதற்கு அனைத்து தகவல்களையும் எடுத்தார்கள் அந்த தகவல்களை எடுத்தாலும் அவற்றை செய்வதற்கான ஒதுக்கீடுகள் இன்று இல்லை.
மக்கள் பாரிய பிரச்சினை
மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகி இருக்கின்றனர். ஒரு பக்கத்தினால் கல்வி தொடர்பாக கட்டணங்கள் அதிகரித்து இருக்கின்றதே பாடசாலைகளில் எல்லா செயல்பாடுகளும் பெற்றோர்கள் மத்தியிலே சுமத்தப்பட்டிருக்கின்றது. பெற்றோர்களிடம் பணத்தினை அறவிட்டு அனைத்தையும் செய்கின்றார்கள் மக்களுக்கு வாழ இயலாத சூழ்நிலை ஒரு பக்கம் காணப்படுகின்றது. இலவச கல்விக்கு பணம் செலுத்தும் செயற்பாடு வந்துள்ளது.
இன்னும் ஒரு பக்கத்தில் நாங்கள் காண்கின்றோம். சுகாதாரம் தொடர்பாக அதில் பாடிய பிரச்சினை காணப்படுகின்றது. இதை அனைத்தும் எல்லார் மத்தியிலும் தற்போது வட் அதிகரிக்க போகின்றது100:18 வட் அதிகரிக்கப் போகின்றது.
இவ்வாறு அதிகரித்தால் மக்கள் எவ்வாறு வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதை பின்தள்ளி 150 வாகன பர்மிட் கொடுக்க போகின்றார்கள். அரசு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் இருக்கும் போது கல்வி தொடர்பாக சுகாதாரத் துறை தொடர்பாக போக்குவரத்தில் எல்லா பக்கத்தினாலும் மக்கள் பிரச்சினையில் இருக்கும் போது வட் அதிகரித்து இருக்கின்ற போதும் அரசியல்வாதிகளுக்கும் இனிய தலைமை பெற்றவர்கள் என்று என்பவர்களுக்கும் 150 வாகனங்கள் சலுகை முறையில் வழங்க போகின்றார்கள்
இந்த வரிகள் யார் மீது சுமத்தப்படும் இவை கூட மக்களுக்கே சுமை. இந்த நிலையில் அரசு 150 வாகனங்களை கொண்டு வந்து இறக்குவதை எவ்வாறு காணலாம் என பார்த்தால் அவர்களுடைய தேர்தலுக்காக அதாவது வைக்க இருக்கின்ற தேர்தலுக்காகவோ அல்லது வைக்க எதிர்பார்க்கின்ற தேர்தலுக்காகவோ கொடுக்கின்ற லஞ்சமாகத்தான் காண்கின்றோம்.
விசேஷமாக எங்களுக்கு தெரியும் வாகன பர்மிட் கொடுப்பவர்களை எடுத்துக் கொண்டால் புத்திஜீவிகள் எனப்படுபவர்களுக்கு கொடுக்கப் போகின்றார்கள் ஏன் இது அரசுக்கு எதிராக பேசுவதை நிறுத்துவதற்காக. மக்கள் வாழ இயலாத சூழ்நிலையில் இருக்கின்றார்கள் மக்களுக்கு ஒரு தீர்வும் வழங்கவில்லை இந்த அரசு இந்த அரசு உடனடியாக தேர்தலை வைத்து மக்களுக்கு உரிய அரசை உருவாக்க வேண்டும் அவ்வாறு இல்லாமல் அரசு மக்களை ஒரு பக்கத்தில் ஒரு சாராருக்கு சலுகை முறையில் வாகனங்கள் மறுபக்கத்தில் அடக்குமுறைகளுக்கு புதிய சட்டங்கள் கொண்டு வந்து இவ்வாறான செயற்பாடுகளால் மக்கள் இன்னும் கீழே செல்வார்கள். நாங்கள் கூறுகின்றோம் இந்த அரசுக்கு மக்கள் ஆணையில்லாத இந்த அரசாங்கம் உடனடியாக மக்கள் ஆணை பெற வேண்டும்.
இந்த செயல்பாடுகளுக்கு இது அவ்வாறு இல்லாமல் இவர்கள் சலுகை அடிப்படையில் வாகனங்கள் சுபரான செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சுமையை ஏற்படுத்துகின்றது. இதனை நாங்கள் பாரிய பிரச்சினையாக பார்க்கின்றோம். தற்போது ஐ.எம்.எப் இன் வழங்கப்பட்ட கடன்களை கூட இன்னும் கொடுக்கவில்லை .
இரண்டாவது கடன்களை கூட இன்னமும் கொடுக்கவில்லை டொலர் கடன்களை இன்னமும் கட்டவும் இல்லை இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பாரிய பிரச்சனைகளுக்குள் வாழும் என்ற சூழ்நிலையில் இவ்வாறான சலுகைகள் வழங்குவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இலங்கை ஆசிரியர் சங்கம் என்கின்ற வகையில் நாங்கள் இதனை வன்மையாக கண்டிப்பதோடு நாங்கள் மக்களின் ஆணைக்காக மக்களுக்கு வாக்குகளை வழங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு நாங்கள் எங்களுடைய போராட்டங்களை முன்னே கொண்டு செல்ல தயாராக இருக்கின்றோம். அதாவது பாதிக்கப்பட்ட மக்கள் கல்வித்துறையில் சுகாதாரத் துறையில் பாதிக்கப்பட்ட மக்களோடு சேர்ந்து நாங்கள் பல போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டு இருக்கின்றோம் என்பதனை உறுதியாக சொல்ல விரும்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.