கொழும்பில் இடம்பெற்ற விருந்து நிகழ்வு! அமைச்சர்கள் மத்தியில் புறக்கணிக்கப்பட்ட கோட்டாபய
கொழும்பில் இடம்பெற்ற ஆளும் கட்சியின் பிரதி அமைச்சர்களுடனான நிகழ்வொன்றில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்துக்கொண்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் பலர் அவரை புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிகழ்வின் போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் எவரும், அவருடன் அதிகம் உரையாடவில்லை எனவும், கோட்டாபய ராஜபக்ச அவர்களின் மேசைக்கு தேடி சென்று பிரதி அமைச்சர்களுடன் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டாபய ராஜபக்ச புறக்கணிப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இவ்வாறு இரண்டு முறை அமைச்சர்களை தானே தேடிச்சென்று உரையாடியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
ஆளும் கட்சியின் அனைத்து அமைச்சர்களையும் ஒன்றிணைத்து இடம்பெற்ற விருந்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச,முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், சமல் ராஜபக்சவும் ஒரே வாகனத்தில் வந்து இந்நிகழ்வில் பங்கேற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
