தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வெளிப்பட்ட அரசியல் மிருகத்தனம்!

Jaffna Sri Lanka Sri Lankan political crisis Northern Province of Sri Lanka
By DiasA Oct 04, 2022 09:06 AM GMT
Report
Courtesy: தி.திபாகரன் MA

ஒரு மக்கள் கூட்டம் தாம் ஆத்மாத்மாக நேசித்த விருப்புக்குரியவர்களின் நினைவு நாட்களை நினைவு கூறுவது அந்த மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமை. அந்த கூட்டுரிமையை தனி நபர்களோ, தனி குழுக்களோ உரிமை கூறுவது பண்பாட்டு பிறழ்வுகளையே ஏற்படுத்தும்.

இந்த வாரம் திலீபனின் நினைவு நாள் அவர் தன்னை ஆகுதியாக்கிய நல்லூர் வீதியில் உணர்வுபூர்வமாக மக்கள் திரண்டு நினைவு கூர்ந்தனர். ஆயினும் அந்த நினைவு கூறலில் ஓர் அரசியல் கட்சி அந்த நினைவு நாளை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்தது போன்று செயல்பட்டமை தமிழ் மக்களின் அரசியல் பரப்பின் பின்னே உள்ள நாசகார அரசியல் மிருகத்தை வெளிப்படுத்திவிட்டது.

இனத்திற்காக தம்மை ஆகுதியாக்கியவர்களை நினைவுகூர்வது அந்த இனத்தின் கூட்டுரிமை. இதனை எந்த சக்தியாலும் தடுத்திட முடியாது. இந்தக்கூட்டுரிமை இனத்தின் பண்பாட்டில் ஆழமான செல்வாக்கு செலுத்தும். இத்தகைய கூட்டுரிமைப் பண்பாடுதான் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலுமாகும்.

இந்த ஈழத்தமிழினக் குழுமத்தின் கூட்டுரிமையை தனியாக அரசியல் கட்சிகள் தாமே பிரதிநிதித்துவப்படுத்த முனைந்தால் ஏற்படக்கூடிய சமூகப் பிறழ்வு, சமூக சீர்கேடுகள் பாரதூரமான உள்ளக முரண்பாடுகளுக்கு வித்திடும்.

சமூக சீரழிவு

இது ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி போரில் தோல்வியடைந்து சொல்லொனாத் துன்பங்களையும், துயரங்களையும் சுமந்து, தோல்வி தந்த பெருவிரக்தியினால் சிதைந்து சின்னாபின்னமாய்ப் போயுள்ள சமூகத்தில் போர் தந்த வலியும், அதனால் ஏற்பட்டுள்ள சமூக மன அழுத்தங்கள், போரில் ஈடுபட்டவர்களையும் மக்களையும் பிடித்துள்ளன.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வெளிப்பட்ட அரசியல் மிருகத்தனம்! | Political Brutality Commemoration Of Dileepan

அத்தகைய ஒரு சூழ்நிலையில் இத்தகைய உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசியல் கட்சிகள் தமது மூக்கை நுழைத்து மக்களை கட்டுப்படுத்த முனைந்தால் மக்கள் அதற்கு எதிராக எழுந்து தமது ஆழ்மனவடுக்களையும், விரக்தியையும், ஆற்றாமையையும் பல்வேறு வகைகளில் வன்முறைவழியில் வெளிப்படுத்த முனைவார்கள்.

அது மேலும் சமூகத்தை சீரழிக்க கூடிய பாதைக்கு இட்டு செல்லும். இந்த பின்னணியில் இத்தகைய முரண்பாடுகளுக்கான காரணங்களை களத்திலிருந்து கொண்டு அலசுகின்ற மூத்த முனைப்பான அரசியல் ஆய்வாளர் ம.நிலாந்தன் பின்வருமாறு கூறுவது முக்கியத்துவம் வாய்ந்தது.

“கட்சி அரசியல் என்று வந்தால் இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றுதான். வாக்கு வேட்டை அரசியலுக்கு முன் எதுவுமே புனிதம் இல்லை. கடந்த 13 ஆண்டுகளாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருந்த பலரும் பாதுகாப்பான இறந்த காலத்தை கொண்டவர்கள்தான்.

பாதுகாப்பற்ற இறந்த காலத்தைக் கொண்ட பலரும் வெளிப்படையாக செயல்படத் தயங்குகிறார்கள்.அதாவது சமூகத்துக்காகப் போராட முன்வந்த பலரும் பாதுகாப்பற்ற இறந்த காலத்தை கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.

சமூகத்தின் பிரமுகர்கள்

இலங்கை தீவில் அதிகம் ஆபத்துக்கு உள்ளாகக்கூடிய ஒரு தரப்பாக அவர்கள் காணப்படுகிறார்கள்-most vulnerable““. 

மேலும் தொடர்ந்து கூறுகையில் “போராட்டம் நடந்த ஒரு காலகட்டத்தில் தம்மையும் தமது கல்வியையும் சொத்துக்களையும் பாதுகாத்து கொண்ட பலரும் நிகழ்காலத்தின் பிரமுகர்களாக வலம் வருகிறார்கள். தமது இறந்த காலத்தை பாதுகாத்து கொண்ட காரணத்தால் அவர்கள் பெற்ற பட்டம், அந்தஸ்து, பதவி, பணம், செல்வாக்கு, பிரபல்யம் காரணமாக அவர்கள் சமூகத்தின் பிரமுகர்கள் ஆகியிருக்கிறார்கள்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வெளிப்பட்ட அரசியல் மிருகத்தனம்! | Political Brutality Commemoration Of Dileepan

தமிழ் அரசியலில் இப்பொழுது துரத்திக் கொண்டு தெரியும் பெரும்பாலான ஆளுமைகள் அவ்வாறு தமது இறந்த காலத்தை பாதுகாத்து கொண்டவர்கள்தான். இவ்வாறு பாதுகாப்பான இறந்த காலத்தை கொண்டவர்கள் அந்த இறந்த காலத்தை தத்தெடுக்க பார்ப்பதுதான் நினைவு கூர்தல் தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம் ஆகும்.”என மேற்கண்டவாறு கூறுவது முற்றிலும் அறிவியல் தளத்திலிருந்து எழும் அறிவார்ந்த கூற்று.

இத்தகைய உண்மையான சமூகப்போக்கை இன்று அரசியல் பரப்பில் பிரமுகராகவும் பிரபல்யமானவர்களாகவும் பதவி பட்டங்கள் பெற்றவர்களாகவும் காணப்படுகின்ற அரசியல் கனவான்கள், பிரமுகர்கள் அறிவார்ந்த ரீதியில் நோக்கவும். அனுகவும் கருத்திற்க் கொள்ளவும் வேண்டும்.

அதற்கு மாறாக தாமும் தமது சுயநல பதவி ஆசைக்காக, அரசியல் அதிகார வெறிக்காக, வாக்கு வேட்டைக்காக தமது ஆழ்மன அரசியல் மிருகத்தை வெளிப்படுத்தி இந்த சமூகத்தை சீரழிப்பது மிகப்பெரும் சமூகவிரோத குற்றமாகும்.

திலீபனின் நினைவு நாளை நாமே நினைவு கூர்வோம் என பறைசாற்றுவது தமிழ் சமூகத்துக்கு ஏதாவது நன்மை பயத்திடுமா? அல்லது தமிழ் சமூகத்தின் தேசிய கட்டுமானத்தை இறுகக் கட்டிட முடிந்திடுமா? அல்லது ஒரு ஆரோக்கியமான தமிழ் தேசிய சமூகத்தை உருவாக்கத்தான் இவர்களால் முடிந்திடுமா? இல்லவே இல்லை.

இந்த நினைவு கூர்தலை உரிமை கோருவது என்பது அவரவர் தம்கட்சி சார்ந்த வளர்ச்சிக்கும், வாக்கு வேட்டைக்கும், சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் கட்டுமானத்தின் ஒரு பகுதியின் உதிரிபாகங்களாக இருந்து செயற்படுவதற்குமே துணைபுரியும்.

அரசியல் கட்சி

அதுமட்டுமல்ல இவ்வாறு சமூக சீரழிவையும், சமூக முரண்பாடுகளையும் தோற்றுவிப்பது தமிழ் தேசியத்தை சுக்குநூறாக உடைக்கும் வேலையே அன்றி வேறொன்றுமில்லை.

தாம் தேசியத் தளத்தில் நிற்கின்றோம் என்றும், தமிழ் தேசியத்திற்காக பாடுபடுகிறோம் என்றும் வாய்கிழிய கத்தினால் மட்டும் ஏதேனும் விளைந்திடாது. வெறும் வாய்ப்பேச்சில் கூறிவிட்டு கொப்பில் இருந்துகொண்டு கொப்பைத் தறிக்கின்ற செயலையே இந்த அரசியல் கட்சி செய்து வருகிறது என்பதை அறிவார்ந்த ரீதியில் ஆராய்ந்து இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வெளிப்பட்ட அரசியல் மிருகத்தனம்! | Political Brutality Commemoration Of Dileepan

முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னரான கடந்த 13 ஆண்டு காலத்தில் தமிழ் தேசியம் சார்ந்த நினைவு கூரல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் கையில் எடுத்தும் அதனால் ஏற்பட்ட எதிர்மறையான விளைவுகளையும் சந்தித்தனர்.

அந்தப் பட்டறிவின் விளைவைக் கவனித்து இன்று அவர்கள் இத்தகைய கூட்டுரிமை விடயங்களில் மக்களே முன்னெடுத்து அதனை செய்யட்டும் என அவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

இது அவர்களை பாதுகாப்பதற்கும் மக்கள் ஆதரவை பெருக்குவதற்குமான இன்னொரு வகையான அரசியல் தந்திரம். ஆனால் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சியோ கூட்டமைப்பினர் ஒதுங்கியமையை தமக்கு கிடைத்த வாய்ப்பாக எண்ணி தாமே முழுமையாக இவற்றினை கையில் எடுத்து தம்மை வளர்த்து விடலாம் என தப்பு கணக்கு போட்டு விட்டனர்.

பொதுவாக இந்த சட்டத்தரணிகளுக்கு கணக்கு போடுவதில் பெரிய குறைபாடு உண்டுதான். அத்தகைய குறைபாடுகளை இன்னொரு தடவை விலாவாரியாக பார்ப்போம்.

தப்பு கணக்கு

இப்போது அந்த தப்பு கணக்கின் விளைவை இந்த வருடம் திலீபன் நினைவு நாளில் அவர்கள் உணர்ந்து இருப்பர்கள். இதிலும் இவர்கள் உணராவிட்டால் இவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றி சொல்வதற்கில்லை. தியாக தீபம் திலீபனின் நினைவு நாளை அனுஷ்டிப்பது முக்கியமா? அல்லது தியாக தீபம் திலீபன் எதற்காக தன்னை ஆகுதியாக்கினாரோ அந்த ஐந்து அம்ச கோரிக்கைகளை கையில் எடுத்து அதற்காக போராடி அவருடைய அந்த இலட்சிய வேட்கையை நிறைவேற்றுவது முக்கியமா என்பதை இந்த அரசியல் வெறியர்கள் தெரிவுசெய்ய வேண்டும்.

இந்த அரசியல் மிருகம் ஆழ்மனதில் புகுந்துள்ள அப்புக்காத்துகள் கடந்த காலத்தை பாதுகாப்பாக கழித்து அந்தக்காலத்தில் கல்வி, பட்டம், பொருள், பதவி, பிரபலம் அந்தஸ்து என எல்லா வழிகளிலும் சுயநலமாக செயற்பட்டுவிட்டு இப்பொழுது தமிழினத்திற்காக உயிரை பணயம் வைத்து போராடி காலத்தை கடத்தியவர்களை காலால் மிதிக்க முற்படுவது கேவலமானதும் அயோக்கியத்தனமானதுமாகும்.

இதனை இறந்த காலத்தில் பாதுகாப்பாக வாழ்ந்து இன்று அரசியல் பிரமுகர்களாக வீற்றிருக்கும் கனவான்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

திலீபனின் கோரிக்கைகள்

நீங்கள் அவ்வளவு பெரிய தியாக தீபம் திலீபனின் விசுவாசிகள் என்றால் திலீபனின் 5 அம்ச கோரிக்கைகளான

1) மீள் குடியமர்த்தல் என்ற பெயரில் வடகிழக்கில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

2) சிறை கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3) அவசரகால சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்

4) ""ஊர்காவல் படையினருக்கு " வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாக களையப்பட வேண்டும்.

5) தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.

என்ற அவருடைய ஐந்து அம்ச கோரிக்கைகளில் முதல் இரண்டு கோரிக்கைகளான, (1) ''மீள்குடியமர்த்தல்'' என்ற பெயரில் வட-கிழக்கில் மேற்கொள்ளப்படும் புதிய திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

2) சிறைக்கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆகிய இரண்டு கோரிக்கைகளையாவது முன்வைத்து போராடுங்கள்.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் வெளிப்பட்ட அரசியல் மிருகத்தனம்! | Political Brutality Commemoration Of Dileepan

அதுவே தியாக தீபம் திலீபனுக்கு நீங்கள் ஆற்றும் உடனடி அர்ப்பணமாக அமையும். நினைவுநாளை நினைவு கூறுவதை தமிழ் மக்களின் கைகளில்விட்டு விடுங்கள். அவர்கள் ஒரு பொது கட்டமைப்பை உருவாக்கி அதை நினைவு கூறட்டும். உங்களுக்கு ஏன் இந்த சிரமம்.

பலதரப்பட்ட மக்கள் சமூகத்திடமும் முட்டி மோதி ஏன் உங்கள் காலத்தை வீணடிக்கிறீர்கள்? நீங்கள் உண்மையான தமிழ் தேசியவாதிகளாக இருந்தால், இந்தப் போராட்டத்தில் மரணித்தவர்களுக்காக நீங்கள் நினைவுகூற வேண்டுமாக இருந்தால் அவர்களின் கோரிக்கைகளை, அவர்களின் இலட்சியங்களை நீங்கள் கையில் எடுத்து அதற்காக போராடுங்கள்.

உண்மையில் நீங்கள் திலீபனை நேசிப்பவர்களாக இருந்தால் திலீபனின் வழியில் உங்கள் பிரச்சார பீரங்கிகளாக தொழிற்படும் அரசியல் வெறியர்கள், சட்டத்தரணிகள், மஞ்சல் சட்டை அணிய துடிப்பவர்களை, சமூக அந்தஸ்து பெற்றவர்களை வட கிழக்கு தழுவிய சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பியுங்கள்.

அதேவேளை தமிழ் மக்களை ஒன்று திரட்டி பிரம்மாண்டமான வெகுஜன போராட்டங்களை நடத்துங்கள். இதன்மூலம் இலங்கை அரச இயந்திரத்தை வடகிழக்கில் முடக்குங்கள். அதுவே நீங்கள் தியாகிகளுக்கு செய்யும் அஞ்சலியாக அமையும்.

அரசியல் மிருகம்

ஆனால் உங்களுக்குள் புகுந்துள்ள அரசியல் மிருகம் உங்களை தமிழ் மக்களுக்காக எதையும் தியாகம் செய்ய தயார் இல்லாமல் இருப்பதையே உங்களது கடந்த கால செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ் மக்களுக்காக எதையும் தியாகம் செய்யாதவர்களை, தியாகம் செய்ய தயார் இல்லாதவர்களை, தமிழ் மக்கள் தலைவர்களாக ஏற்க போவதில்லை. இன்றைய நெருக்கடி காலநிலையில், நிலை மாறுகால சூழலில் நீங்கள் உங்களை தலைவர்களாக நினைத்து கொண்டு வலம் வரக்கூடும்.

அவ்வாறு வலம் வருகின்ற போது சுயநலங்களுக்கான துதிபாடும் ஒரு கூட்டம் இந்த தலைவர்களை சுற்றித் திரிவதும் தவிர்க்க முடியாதது. தமிழ் மக்களின் பன்னெடுங்கால வரலாற்று வழியில் இத்தகைய தியாகிகள் -- துரோகிகள் என்கின்ற இரண்டு தரப்பும் இருக்கவே செய்கிறது.

தியாகத்தை போற்ற ஒரு பெருங் கூட்டமும், துரோகத்தையும் சுயநலங்களையும் ஆதரிக்க ஒரு சிறு கூட்டமும் எப்போதும் இருக்கவே செய்யும். சுயநலத்திற்கான பாதையில் சென்றவர்கள் வரலாற்றில் சுவடு தெரியாமல் அழிந்து போய்விட்டனர்.

வரலாற்றில் எப்போதும் வாழ்வது தியாகமும் அர்ப்பணிப்பும் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை விடுத்து வெறும் விளம்பரங்களுக்காகவும், நாற்காலி அரசியலுக்காகவும், பதவி பட்டங்களுக்காகவும், உங்கள் சுயநலத்திற்காகவும் மட்டுமே தமிழ் மக்களுக்காக ஆகுதியானவர்களின் நினைவு நாளை குத்தகைக்கு எடுத்து நடத்த முற்பட்டால் வரலாறு உங்களை மன்னிக்காது.

"வரலாற்றுக்கு மன்னிக்க தெரியாததை தவிர தெரியாதது என்று ஒன்றுமில்லை".

தி.திபாகரன், M.A.

7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
மரண அறிவித்தல்

தம்பசிட்டி, Morden, United Kingdom

29 Jun, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்

புலோலி மேற்கு, Melbourne, Australia, Blackburn, Australia

06 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, Scarborough, Canada

04 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், மாங்குளம், London, United Kingdom

09 Jul, 2012
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், ஆனைக்கோட்டை

20 Jun, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, உடுப்பிட்டி, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US