நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்திற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொலிஸார்
தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு நாளான இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகமான அறிவகத்தில் இன்று அஞ்சலி நிகழ்வு இடம்பெறலாம் என்ற அச்சத்தில் பொலிஸாரும், புலனாய்வு துறையினரும் அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகமான அறிவகத்தில் மாலை 4.30 மணியளவிலிருந்து 5.30 மணி வரை பொலிஸாரும், புலனாய்வு துறையினரும் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,தியாகி பொன் சிவகுமாரனின் 47 வது நினைவு தினத்தில் இன்றுகாலை நினைவுத்தூபியில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அஞ்சலி செலுத்த முயற்சித்தபோது, மிக அத்தியாவசிய தேவை தவிர்ந்தவைக்கு பயணத்தடை உள்ளமையினால் சுகாதார ரீதியிலான காரணங்களின் அடிப்படையில் மட்டுமே தாம் தடையேற்படுத்துவதாகத் பொலிஸார் தெரிவித்ததை அடுத்து பொது இடத்தைத் தவிர்த்து பிரத்தியேக இடத்தில் விளக்கேற்றி தவிசாளரால் அஞ்சலிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 19 மணி நேரம் முன்
தமிழ் புத்தாண்டு சிறப்பு திரைப்படம்.. கலைஞர் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பாகும் முன்னணி ஹீரோவின் படம் Cineulagam
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri
வெளிவரப்போகும் குணசேகரன் ஈஸ்வரியை தாக்கிய வீடியோ, எப்படி தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri