இலங்கையில் சொத்துக்களை வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Dhayani May 11, 2026 12:05 PM GMT
Report

இலங்கையில் பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போருக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

வாடகைக்கு விடப்பட்ட அல்லது குத்தகைக்கு விடப்படும் தங்கும் விடுதிகள், வீடுகள் மற்றும் வணிகக் கட்டிடங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், உரிமையாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! மனைவியை நாடுகடத்த இராஜதந்திர உதவி - பலரிடம் வாக்குமூலம் பதிவு

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் மரணம்! மனைவியை நாடுகடத்த இராஜதந்திர உதவி - பலரிடம் வாக்குமூலம் பதிவு

அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை

குறித்த அறிக்கைகளின்படி, வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் சொத்துக்களை வாங்கும் தனிநபர்கள் அல்லது குழுக்கள், சொத்து உரிமையாளர்கள் சற்றும் எதிர்பாராத வழிகளில் அதனை குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.

இலங்கையில் சொத்துக்களை வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Police Warrning Notice To Property Owners

எனவே பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்போர் அவதானமாக செயற்படுமாறு பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது.

தங்குமிடங்கள், வணிகக்கட்டடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், வீடுகள் மற்றும் பிற கட்டடங்களை குறுகிய அல்லது நீண்ட கால அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும் அல்லது குத்தகைக்கு விடும் தனிநபர்கள் அல்லது குழுக்கள், அந்த வளாகங்களைப் பயன்படுத்தி பல்வேறு மோசடிச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக அடையாளம் காணப்படுவதால், அத்தகைய வளாகங்களை வாடகைக்கு விடும்போது உரிமையாளர்கள் கவனமாக செயல்படுவது மிகவும் அவசியமாகும்.

இந்த வீடுகள் மற்றும் கட்டடங்களின் உரிமையாளர்கள் சற்றும் எதிர்பாராத விதத்தில் இந்த வளாகங்களை வாடகைக்கு எடுக்கும் அல்லது குத்தகைக்கு எடுக்கும் தனிநபர்கள், மோசடிச் செயல்களையும் குற்றங்களையும் செய்வதற்கு இந்த வளாகங்களைப் பயன்படுத்துவது குறித்து ஏராளமான அறிக்கைகள் வந்துள்ளன.

இதன் காரணமாக, உரிமையாளர்கள் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும், குற்றவியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் காணப்படுகிறது.

கடந்த ஆண்டும், 2026-ஆம் ஆண்டு இதுவரையிலும், வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு வளாகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் தங்குமிடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டத்தை மீறித் தங்கியுள்ளனர்.

மேலும், இணையம் மூலம் மிகவும் இரகசியமான முறையில் நிதி மோசடிகளைச் செய்வதோடு, தொடர்புடைய கணினிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்களையும் திருடியுள்ளனர். கைதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள்

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத்துறையும் இலங்கை பொலிஸாரும் இதற்கு எதிரான சட்டத்தை ஏற்கனவே நடைமுறைப்படுத்தியுள்ளன.

இதுபோன்ற சூழ்நிலைகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, பொதுமக்கள் பின்வருவனவற்றைப் பற்றியிருப்பது மிகவும் முக்கியம்.

இலங்கையில் சொத்துக்களை வைத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை | Police Warrning Notice To Property Owners

* பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 76 இன் படி, ஒரு வீட்டில் வசிக்கும் அனைத்து நபர்களைப் பற்றிய தகவல்களையும் பெறும் அதிகாரம் பொலிஸாருக்கு உள்ளது என்பதை ஒவ்வொருவரும் அறிந்திருப்பது அவசியம்.

* அதன்படி, குடும்பத் தலைவர், குடும்ப உறுப்பினர்கள், பணியாளர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்கள் பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்தில் வழங்க வேண்டும். குடியிருப்பாளர்களின் மாற்றம் (உறுப்பினர்களின் புதிய வருகை அல்லது வெளியேற்றம்)

* குடும்பத் தலைவர் அல்லது வீட்டின் உரிமையாளர் ஒவ்வொரு புதிய நிகழ்வைப் பற்றியும் சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், மேற்கூறிய பிரிவுகளின்படி தண்டனைக்குரிய குற்றமாக அமையும்.

* மேலும், அத்தகைய இடங்கள் அல்லது நபர்கள் குறித்துப் பெறப்பட்ட அனைத்துத் தகவல்களையும், ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் நிறுவப்பட்டுள்ள பொதுப் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினர்கள் மூலம் பொலிஸாருக்கு மிக விரைவாகத் தெரிவிக்கலாம்.

* உங்கள் வீடுகள் அல்லது கட்டடங்களை வாடகைக்கு விடும்போது அல்லது குத்தகைக்கு விடும்போது, ​​அவற்றை வாடகைக்கு எடுக்கும் நபர்களின் அடையாளம் மற்றும் தேவைகள் குறித்து எப்போதும் கவனமாகவும் அக்கறையுடனும் இருங்கள். இது சாத்தியமான மோசடி மற்றும் குற்றங்களைக் குறைக்கவும், வீட்டு உரிமையாளர்கள் சிக்கலான சூழ்நிலைகளில் சிக்குவதைத் தடுக்கவும் உதவும்.

இத்தகைய குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக இலங்கை பொலிஸார் எப்போதும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடத்தல்காரர்கள், குற்றவாளிகள் அல்லது அவர்களால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத அல்லது சமூக விரோதச் செயல்கள் குறித்து உங்களுக்கு தகவல் கிடைத்தால், உடனடியாக 119, 118 என்ற தொலைபேசி எண்களில் இலங்கை பொலிஸ் அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கினறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மகிந்த..! பின்னணியில் முக்கிய சத்தியக்கடதாசி - சட்டத்தரணிகளுடன் அவசர சந்திப்பு

நாளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் மகிந்த..! பின்னணியில் முக்கிய சத்தியக்கடதாசி - சட்டத்தரணிகளுடன் அவசர சந்திப்பு

முதலமைச்சர் விஜய்யை கைப்பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்! ஆரத்தழுவி வரவேற்றார் உதயநிதி

முதலமைச்சர் விஜய்யை கைப்பிடித்து அழைத்துச்சென்ற ஸ்டாலின்! ஆரத்தழுவி வரவேற்றார் உதயநிதி


10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US