மேல் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை
மேல் மாகாணத்தில் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாதோருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 1178 பேருக்கு இவ்வாறு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாணத்திற்குள் சுகாதார விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பது தொடர்பில் நேற்று 6000 இற்கும் அதிகமான நபர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய 641 பொலிஸ் உத்தியோகத்தர்களினால், 3113 மோட்டார் சைக்கிள்களும், 1822 முச்சக்கரவண்டிகளும், இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
இதேபோன்று 6265 நபர்களும், சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு இவர்களில் 1178 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இவ்வாறான சோதனைகளை முன்னெடுத்து சுகாதார விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam
