தாமே முன்வந்து தகவல் தந்த, காணாமல் போன சிறுமி!
காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுமியே, தாம் இருப்பதை பற்றி தமது தாயாருக்கு அறிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது. மஹரகம, நாவின்ன பகுதியில் வசிக்கும் நேஹா என்ற சிறுமி கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து அவரை கண்டுபிடிக்கும் முகமாக பொலிஸார் அவருடைய புகைப்படத்தையும் ஊடகங்களி்ல் வெளியிட்டிருந்தனர்.
இந்தநிலையில் அவர் நேற்று வீடு திரும்பியுள்ளதாக அவரின் தாயார், மஹரகம பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு அறிவித்திருந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுமியே தாம் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாகவும், ஊடகங்களில் தாம் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளதாகவும் தமது தாயாருக்கு அறிவித்ததாக தெரியவந்துள்ளது.
எனினும் குறித்த சிறுமி எங்கே தங்கியிருந்தார் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.
எமில் ரஞ்சனுக்கு மரணதண்டனை! - தமிழர்கள் ஐவர் விடுதலை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
