தென்னிலங்கையில் குவிக்கப்படவுள்ள பொலிஸார் - செய்திகளின் தொகுப்பு
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைக்கமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இந்த பாதுகாப்பு திட்டங்களுக்கு விசேட அதிரடிப்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இராஜகிரியவில் உள்ள தேர்தல் அலுவலகத்தை அண்மித்த வீதிகளில் எதிர்வரும் 15ஆம் திகதி விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் வேட்பாளர்களுடன் வருகைதரும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளருடன் கட்சியின் செயலாளர் உட்பட இருவர் மாத்திரமே வேட்புமனு ஏற்கும் அலுவலகத்திற்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |