இலஞ்சம் பெறுவதில் பொலிஸார் முன்னிலை!
இலங்கையின் ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் இலஞ்சம் பெறும் செயற்பாட்டில் பொலிஸார் முன்னிலை வகிப்பதாக தெரிய வந்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல், மோசடிகளைத் தடுப்பதற்கான விசாரணைகள் ஆணைக்குழுவின் தலைவர் நீல் இத்தவெல கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அவரது கருத்தின் பிரகாரம் இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் அதிகளவில் தொடர்புடைய முதல் 10 பொது சேவைகளில் பொலிஸ் முதலிடம் வகிக்கிறது.
இலஞ்சம் பெறும் செயற்பாடுகள்
அரசியல்வாதிகள், சுங்கம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள் என முக்கிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இவ்வாறு இலஞ்சம் அல்லது ஊழல் என்பவற்றுடன் தொடர்புடைய பட்டியலில் முறையே பொலிஸார், அரசியல்வாதிகள், சுங்கத்திணைக்கள உத்தியோகத்தர்கள், குடிவரவு – குடியகல்வு திணைக்களம், பாடசாலைகள், அமைச்சுக்கள், காணி பதிவு அலுவலகம், மாகாணசபைகள்இ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம், பிரதேச செயலகங்கள், பதிவாளர் நாயகம் அலுவலகம் மற்றும் நீதிமன்றம் என்பவற்றுடன் தொடர்பான சேவைகளிலேயே கூடுதலாக இலஞ்சம் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் பதிவாகியுள்ளன.
பணச்சலவைக்கான வாய்ப்பு
அவற்றில் முதலாவது சுங்க திணைக்களம், இரண்டாவது உள்நாட்டு வருமான திணைக்களம், கலால் வரி திணைக்களம், குடிவரவு – குடியகல்வு திணைக்களம் மற்றும் மோட்டார் வாகன பதிவு திணைக்களம் என்பன முறையே முதல் 5 இடங்களில் உள்ளன.
இவை தவிர மேலும் பல நிறுவனங்கள் பணச்சலவைக்கான வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதாகவும் நீல் இத்தவெல தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



