மீன் லொறியொன்றை சுற்றிவளைத்த பொலிஸார்: சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
இந்தியாவிலிருந்து - சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பீடி இலைகளை, மீன் லொறியொன்றில் கடத்திச் செல்ல முட்பட்ட போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடல்மார்க்கமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட குறித்த பீடி இலைகளை புத்தளம் - மாம்புரி பகுதியில் வைத்து இன்று (05.10.2022) பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக பீடி இலைகளை கடத்திச் செல்வதாக நுரைச்சோலைப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய பொலிஸார் லொறியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்கள்
இந்நிலையில் லொறியில் இருந்த சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது ரெஜிபோர்ம் பெட்டியினுள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 774 கிலோ பீடி இலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகள்
இந்த சம்பவத்தில் பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த பீடி இலைகளின் பெறுமதி 46 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய சந்தேக நபர்கள் தொடர்பில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
