ஹேக்கர்களினால் சூறையாடப்பட்ட பல மில்லியன் ரூபா : விசாரணைக்கு அழைப்பாணை!
புதிய மக்கள் முன்னணியின் (நவ ஜனதா பெரமுண) தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினரை வாக்குமூலம் அளிப்பதற்காக வருமாறு தலங்கம பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர்.
இந்த அழைப்பானயைானது இன்று (26.05.2026) அனுப்பப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களின் கைகளுக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக, 28 ஆம் தேதி நிதி அமைச்சின் செயலாளருக்கு எதிராக சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் கடந்த ஏப்ரல மாதம் 28ம் திகதி போராட்டமொன்றில் ஈடுபட்டிருந்தனர்.

நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவின் இல்லத்திற்கு அருகே, குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் மீது மனிதக் கழிவுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, அங்கு கூடியிருந்த குழுவினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொர்பாக சுகீஸ்வர பண்டார பொலிசில் மேற்கொண்டுள்ள முறைப்பாடு குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அவரும் அவரது குழுவினரும் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 14 மணி நேரம் முன்
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam