கொழும்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு
கொழும்பின் புறநகர் பகுதியான வத்தளைப் பகுதியில் இருந்து திருடப்பட்ட லொறி ஒன்று கடுவெல நீதிமன்றத்திற்கு அருகில் பயணித்த போது பொலிஸாரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற லொறி மீதே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
லொறி திருடப்பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரினால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
நுரைச்சோலையில் இருந்து கொழும்பு நோக்கி மரக்கறி கொண்டு செல்லும் வேளையில் குறித்த லொறி கொள்ளையிடப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம்
இந்நிலையில் வெல்லம்பிட்டிய மற்றும் கடுவெல பகுதிகளில் பயணித்த லொறியை சோதனையிட பொலிஸார் மறித்த போதும், அதன் சாரதி தப்பிச் செல்ல முயன்றமையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
லொறியின் சக்கரங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு லொறி நிறுத்தப்பட்ட நிலையில், சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சாரதியிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

3-வது முயற்சியில் UPSC தேர்வில் வெற்றி பெற்று.., திருமணம் செய்துகொண்ட இரண்டு IAS அதிகாரிகளின் கதை News Lankasri

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
