யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர் - அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர்.
மீட்டர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணி ஒன்றுக்கு அழைத்து வந்து கொடூரமாகத் தாக்கி துன்புறுத்தும் காணொளி காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த காணொளி தொடர்பில் வடமாகாண மூத்த பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தோர் வடமாகாண மூத்த பிரதிப்பொலிஸ்மா அதிபர் அலுவலகம் அல்லது அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தகவல் வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளதா என்பது தொடர்பிலும் விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
