அரசாங்க கொடியை துஷ்பிரயோகம் செய்தவரை கைது செய்ய நடவடிக்கை
காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் அண்மையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை ஏந்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ ஒன்றில், குறித்த நபர் படுக்கையில் படுத்திருந்தவாறு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை போர்வையாக பயன்படுத்துவதைக் காட்டுகிறது.
அத்தோடு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை தீயிட்டு அழிப்பதாகவும் அவர் கூறியதாகக் கூறப்படுகிறது.
கடந்த 09 ஆம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதன் பின்னர் கொடியை எடுத்துச் சென்ற நபர் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டு நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளதாக தெரிவித்த பொலிஸார், சிசிடிவி ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.