செவ்வந்தி - பிரசன்ன தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
கட்டாய விடுப்பில் உள்ள பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட தேசபந்து தென்னகோனை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அடங்கிய 15 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
19 நாட்களாக தேடப்பட்டு வரும் தேசபந்து தென்னகோன் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
பயணத் தடை
கிரிபத்கொடயில் உள்ள அரசாங்க காணிக்கு போலி பத்திரங்களைப் பயன்படுத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது.
பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்றதற்கு உதவிய பிரசன்ன ரணவீரவையோ அல்லது இஷாரா செவ்வந்தியையோ பொலிஸார் இன்னும் கைது செய்ய முடியவில்லை.
நீதிமன்றத்தின் தீர்ப்பு
சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. தேசபந்து தென்னகோன், இஷாரா செவ்வந்தி மற்றும் பிரசன்ன ரணவீர ஆகியோரைத் தேடும் நடவடிக்கைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சம்பவம் குறித்து அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று கூறுகையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு மதிப்புமிக்கது.
தேசபந்து தென்னகோனுக்கு அடைக்கலம் அளித்த அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த மூன்று சந்தேக நபர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Serial update: அத்துமீறிய அறிவுக்கரசி.. கழுத்தை நெறித்தப்படி எச்சரித்த அதிகாரி- தர்ஷன் மாட்டுவாரா? Manithan
