அநுர அரசிற்கு தொடரும் நெருக்கடி! பெருந்தொகை டொலர்கள் மாயத்தின் பின்னணியில் சதி
சமகால அநுர அரசாங்கம் ஏற்கனவே நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்டுள்ள மோசடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், தற்போது மற்றுமொரு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஒன்றிற்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் கடன் தொகை காணாமல் போயுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிதி மோசடியின் பின்னணியில் ஹேக்கர்கள் உள்ளார்களாக என்பது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்டர்போலின் உதவி
இந்த நிலையில் விசாரணைகளின் போது, தேவை ஏற்படின் சர்வதேச பொலிஸாரான இன்டர்போலின் உதவியைப் பெற்றுக்கொள்ள முடியும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சைபர் குற்றவாளிகள் சிலர் இலங்கைக்கு வருகை தந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில், குறித்த பணம் ஹேக்கர்களிடம் சென்றடைந்தது உறுதியாகக் கண்டறியப்பட்டால், இலங்கை பொலிஸார் சர்வதேச பொலிசாரின் உதவியை நாட முடியும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam