நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு அதிகரிப்பு:உப பொலிஸ் பரிசோதகருடன் ஆறு பொலிஸாரின் பாதுகாப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக ஒரு உப பொலிஸ் பரிசோதகர் உட்பட ஆறு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துமாறு அமைச்சரவை பாதுகாப்பு பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர்(நடவடிக்கை), அந்த பிரிவின் பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
பிரதேச பொலிஸ் நிலையங்களில் இருந்து அமைச்சரவை பாதுகாப்பு பிரிவுக்கு தகுதியான அதிகரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வழங்கப்பட வேண்டிய சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பட்டியல் ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறும் பாதுகாப்புக்கு வழங்கப்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் முக்கிய பிரமுகர்களின் விருப்பத்தை கடிதம் மூலம் பெற்றுக்கொள்ளுமாறும் உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொறுப்பதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்களை நடத்தி வரும் மக்கள் அரசியல்வாதிகள் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதனால், ஆத்திரம் கொண்டுள்ள மக்கள் அரசியல்வாதிகள் மீது தாக்குதல்களை நடத்தக் கூடும் என்ற காரணத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
