பிரபல அரசியல்வாதியின் மருமகன் சிறையில்! நாடு முழுவதும் தேடும் பொலிஸார்
நாடு முழுவதும் பல கோடி ரூபாய் பெறுமதியான வாகனங்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் ஏற்கனவே விளக்கமறியலில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டு வந்தவர் ஏற்கனவே மற்றொரு வாகன மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
குறித்த சந்தேகநபர் வேறொரு வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதையோ அல்லது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பதையோ கண்டி பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அறிந்திருக்கவில்லை.
இந்நிலையில் இன்று காலை வரை சந்தேகநபரை தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபரின் தந்தையிடம், குற்றம் சாட்டப்பட்ட மகன் தொடர்பில் பொலிஸார் கேட்டபோது, அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
மக்கள் தகவல்
சந்தேகநபர் விளக்கமறியலில் உள்ளதாக மக்கள் குழுவொன்று பொலிஸாருக்கு அறிவிக்கும் வரை சந்தேகநபர் தொடர்பில் பொலிஸாருக்கு இந்தத் தகவல் தெரியாது என்பது வியப்பான விடயமாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
