முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு!

Mullaitivu Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Jun 26, 2022 12:17 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவிகள் துஸ்பிரயோகத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று உயர்தர மாணவர்களை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்று வரும் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் உள்ளிட்ட 5 மாணவர்கள் முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு நகரப்பகுதியில் பிரத்தியேக வகுப்பு கொடுக்கும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை(18) முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதற்கமைய குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனுடன் சம்மந்தப்பட்ட 5 உயர்தர மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

குற்றவாளிகள்

முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு! | Police Search More Students Mullaitivu

பிரத்தியேக வகுப்பு என வீடுகளில் சென்று கணிதபாடம் கற்பித்து வந்த அபிவிருத்தி உத்தியோகத்தராக அண்மையில் தெரிவான குறித்த சந்தேக நபர் முல்லைத்தீவு நகரில் உள்ள முதன்மை பாடசாலை ஒனறில் ஆசிரியராக நியமனம் பெற்று கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பிரத்தியேகமாக காணிதபாடம் கற்பித்து வந்துள்ளார்.

பிரத்தியேக கணித பாடம் கற்பிற்கும் ஆசிரியரால் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவியால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய முல்லைத்தீவு பொலிஸாரால் செல்வவுரம்,சிலாவத்தை,உண்ணாப்பிலவு,கள்ளப்பாடு பகுதிகளை சேர்ந்த நான்கு உயர்தர மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை(20) கைது செய்யப்பட்டுள்ளார்கள். பின்னர் இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு! | Police Search More Students Mullaitivu

இந்த சம்பவத்தின் முதன்மை காரணமான மாணவியின் பாடசாலை நண்பன் 18 வயதுடைய கள்ளப்பாடு தெற்கினை சேந்த உயர்தர மாணவன் கடந்த செவ்வாய்கிழமை(21) முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவர் தனது நண்பியான பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படத்தை எடுத்து பிரத்தியேக வகுப்பு ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.

விசாரணை

முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு! | Police Search More Students Mullaitivu

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் தலைமறைவான நிலையில் கடந்த வியாழக்கிழமை(23) சட்டத்தரணி ஒருவர் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளார். இவரையும் எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்றில் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய முல்லைத்தீவு பொலிஸார் ஆறு மாணவிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டு அவர்ளை மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

முல்லைத்தீவில் மாணவிகள் துஸ்பிரயோகம்: சம்பவத்துடன் தொடர்புடைய 3 மாணவர்களை தேடி பொலிஸ் வலைவிரிப்பு! | Police Search More Students Mullaitivu

சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் முல்லைத்தீவு பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன் இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US