யாழில் கடலில் மூழ்கியவரை விரைந்து காப்பாற்றிய பொலிஸார்!
யாழ்ப்பாணம்- காரைநகர் கடலில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கிய நபரொருவரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (16) இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு ஒரு குழுவினர் சுற்றுலாவிற்காக வருகை தந்துள்ளனர்.
காப்பாற்றிய பொலிஸார்
இதன்போது, நபரொருவர் காரைநகர் கடலில் நீராடிக் கொண்டு இருந்தவேளை திடீரென நீரில் மூழ்கியுள்ளார்.
இதனையடுத்து, விரைந்து செயற்பட்ட உயிர் காக்கும் பொலிஸாரான வினோதன் மற்றும் வேரகொட ஆகியோர் அவரை தண்ணீரில் இருந்து மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின்னர் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
