யாழில் திடீர் சுற்றிவளைப்பு - தனியார் விடுதிக்குள் சிக்கிய மூன்று யுவதிகள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர்.
விடுதியில் பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மூன்று யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர்.
மருத்துவ பரிசோதனை
கைது செய்யப்பட்ட யுவதிகளை விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேக நபர்களான மூன்று யுவதிகளையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
You may like this....

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam
