கிடிகொட பெல்லன வத்த பகுதி ஹோட்டலில் 76 பேர் அதிரடியாக கைது
சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிடிகொட பெல்லன வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இளைஞர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்து ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று (22) இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 15 பெண்கள் உட்பட 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சந்தேகநபர்களிடம் இருந்து ஐஸ் போதைப்பொருள், கேரளா கஞ்சா மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகளை வைத்திருந்த 03 பெண் சந்தேக நபர்களும் 14 ஆண் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் 18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் கொழும்பின் புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சீதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
