ஜனாதிபதியிடம் மனு கையளிக்க முற்பட்ட கேப்பாப்பிலவு மக்களை தடுத்த பொலிஸார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) மனு கையளிக்க முற்பட்ட கேப்பாப்பிலவு மக்களை பொலிஸார் தடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் புதுக்குடியிருப்பு (Puthukkudiyiruppu) கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மக்களுக்கு காணி உரிமம் வழங்கும் நிகழ்வின் போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
பலத்த பாதுகாப்பு
இதன்போது, இரண்டு உலங்கு வானூர்திகள் தரையிறக்கப்பட்டதுடன் அப்பகுதியிலுள்ள அனைத்து வீதிகளுக்கும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
மேலும், ஜனாதிபதியின் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டவர்களை தவிர வேறு யாரும் உட்செல்லாதவாறு பொலிஸ் மற்றும் இராணுவத்தினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், கேப்பாப்பிலவு மக்கள் தங்களது காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதியிடம் மனு கையளிக்க முற்பட்ட போதே இவ்வாறு குறித்த மக்கள் உட்பிரவேசிக்க பொலிஸார் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |