யாழில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இரு சிறுமிகளை மீட்ட பொலிஸார்
யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளை சாவகச்சேரி பொலிஸார் மீட்டுள்ளனர்.
நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படும் 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளே இவ்வாறு நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பில் 20 மற்றும் 21 வயதுகளையுடைய ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் சிறுமிகளுடன் அதே வீட்டில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
மீட்கப்பட்ட இரண்டு சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 5 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan