இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்த 15 பெண்கள் தொடர்பான தகவலை வெளியிட்ட பொலிஸார்
பயங்கரவாதி சஹ்ரானின் ஆணையை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் தற்கொலை தாக்குதல் நடத்த தயாராக இருந்த 15 பெண்களின் பெயர் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற குற்றச்சாட்டில் மாவனெல்ல பகுதியில் கைது செய்யப்பட்ட யுவதி இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
மொஹமட் இப்ராஹிம் சஹிடா என்ற 24 வயதுடைய பெண் மானனெல்ல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் மானனெல்ல பிரதேத்தில் புத்தர் சிலைக்கு தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் மற்றும் மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல் ஹக் என்பவர்களின் சகோதரியாகும்.
தாக்குதல் நடந்த ஒரு வாரத்தின் பின்னர் கம்பளை பாதணி கடையினுள் மறைந்திருந்த குறித்த இரண்டு சகோதரர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த இளம் பெண் கைது செய்யப்பட்ட விசாரணை மேற்கொண்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் முக்கிய சில தகவல்களை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டு காத்தான்குடியில் சஹ்ரான் ஹஷீம் நடத்தில் கடும்போக்குவாத போதனைகளில் தான் உட்பட 15 பெண்கள் கலந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தான் உட்பட 15 பேரும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தற்கொலை குண்டுதாரியாகுவதற்கு சஹ்ரானிடம் சபதம் செய்துக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு சபதம் செய்த 15 பேரில் 5 பேர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளனர். அதற்கமைய சபதம் செய்துக் கொண்ட பெண்களின் முழு விபரங்களையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
சஹ்ரானின் தாயார் அப்துல் சத்தார்
சித்தி உம்மா சஹ்ரானின்
சசோதரியான மொஹமட் காசிம் ஹிதாயா
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய மொஹமட் செய்னாவின் மனைவியான ஆதம் லெப்பே பாத்திமா
சஹ்ரானின் சகோதரரான மொஹமட் ரில்வானின் மனைவி மொஹமட் நஸ்ஹத் பாத்திமான நப்னா
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய அசாத்தின் மனைவியான பெரேஸா தற்கொலை குண்டுதாரியாகுவதற்கு சபதம் எடுத்த சிறைச்சாலையில் உள்ள பெண்களின் விபரம் சஹ்ரான் ஹசீமின் சகோதரி மொஹமட் காசிம் ஹிதாயா
மாவனெல்ல புத்தர சிலை உடைப்பிற்கான சந்தேக நபரான சாதிக்கின் மனைவி மொஹமட் பலீல் பாத்திமான சாதியா
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் டுபாயில் கைது செய்யப்பட்ட மொஹமட் மில்ஹானின் மனைவியான மொஹமட் அஹமதுல்லா பாத்திமா ஜுஸ்னா
தற்கொலை குண்டுதாரியாவதற்கு சபதம் எடுத்த பயங்கரவாத விசாரணை பிரிவின் தடுப்பில் உள்ள பெண்களின் விபரம் சஹ்ரானின் சாரதியான கபூர் மாமா என்பவரின் மனைவி உதுமாலெப்பே பரிசானா
சஹ்ரானின் உறவினரின் மனைவி காத்தான்குடி மும்தது ஹனீபா நுஸ்ரா
மொஹமட் மில்ஹானின் மனைவி மொஹமட் சாலிஹ் ஜுபய்டியா
காத்தான்குடி தாருல் ஆதர் பள்ளிவாசல் தலைவர் ரவுப்பின் மகளான 22 வயதுடைய அப்துல் ரவுப் பாத்திமா சாரா
ரவுப் பாத்திமா சாராவின் தாயார் அப்துல் துந்தாஸ் சித்தி சாதுனா
காத்தானகுடியில் வசித்த செய்யது அஹமது அஸ்மியா
அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய மொஹமட் இப்ராஹம் சஹிடா




