திருடிய நகைகளை ஒருமணி நேரத்திற்குள் மீட்டுள்ள பருத்தித்துறை பொலிஸார்!
ஆசிரியை ஒருவரின் வீட்டின் கதவை உடைத்துத் தங்க நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களை பருத்தித்துறை பொலிஸார் ஒரு மணித்தியாலத்திற்குள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (27.03.2023) புலோலி, காந்தியூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காலையில் வீட்டார் வெளியில் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்தி வீட்டின் பின் கதவை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த 1காப்பு, 1சங்கிலி, 1 கைச்சங்கிலி, 1 நெக்லஸ் அடங்கலாக 3 3/4 பவுண் நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
மீட்கப்பட்ட நகைகள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடாத்திய விசாரணையில் பொலிஸார் களவாடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க தலைமையில் பதில் பொறுப்பதிகாரி சேந்தன் உட்பட்ட பொலிஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் மீட்கப்பட்ட நகைகளும் பருத்தித்துறை நீதிமன்றில் ஏற்படுத்தப்படவுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாழைச்சேனையில் வீடு உடைத்து திருட்டு
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ரிதிதென்னை பிரதேசத்தில் புஸ்ரீட்டியிருந்த வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 2 அரை பவுண் தங்க நகை மற்றும் 3 இலச்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றைய தினம் (27.03.2023) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸார்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர் குடும்ப சதகமாக சம்பவ தினமான நேற்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு இரவு 7 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்த 2 அரை பவுண் தங்க ஆபரணம் மற்றும் 3 இலச்சம் ரூபா பணத்தைத் திருடர்கள் திருடிச் சென்றுள்ளதையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதனையடுத்து இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக
விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
