கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் குவிப்பு! ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் (VIDEO)
அரசாங்கத்திற்கெதிரான மக்கள் போராட்டமானது மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் இன்றும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,குறித்த போராட்டத்தினை கட்டுப்படுத்துவதற்காக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும் சற்றுமுன்னர் போராட்டத்தில் குதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி தீப்பந்தம் ஏந்தியவாறு தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்றலில் சற்று முன்னர் மாபெரும் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.





நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் மாலை திருவிழா




