வவுனியா நகரில் வர்த்தக நிலையங்கள் மீது பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கை
வவுனியா நகர வீதி கடைகள் மற்றும் மரக்கறிகள், பழங்கள் விற்பனை நிலையங்கள் மீது பொலிஸார் திடீர் சோதனை மேற்கொண்டதுடன், முகக்கவசம் அணியாதவர்கள், சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றாதவர்கள் மீதும் இன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் - 19 மூன்றாவது அலையின் தாக்கம் வேகமாக அதிகரித்து வரும்
நிலையில், வவுனியாவிலும் அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதார நடைமுறைகள்
தொடர்பாக பொலிஸாரால் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தவகையில், வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொலிஸார் வீதியோரங்களில் வியாபாரம் செய்வோர், வீதியோர வர்த்தக நிலையங்கள், மரக்கறிக் கடைகள், பழக்கடைகள் என்பவற்றைப் பார்வையிட்டுள்ளனர்.
அத்துடன் அங்கு சுகாதார நடைமுறைகளைப் பேணாதோர், முககவசம் அணியாதோர், முகக்கவசத்தை சீராக அணியாதோர் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது அவர்களது பெயர் விபரங்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கு கடும்
எச்சரிகையும் பொலிஸாரால் வழங்கப்படுவதுடன், சுகாதார அறிவுறுத்தல்களும்
வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




