முன்னிலை சோசலிசக் கட்சியின் தலைமையகத்தில் அத்துமீறி நுழைந்த பொலிஸார்
முன்னிலை சோசலிசக்கட்சியின் நுகேகொடையிலுள்ள தலைமையகத்தினுள் பொலிஸார் அத்துமீறிப் பிரவேசித்ததாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது தொடர்பாக கட்சியின் கல்விப்பிரிவு செயலாளர் புபுது ஜயகொட ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஒருவரைத் தேடி வந்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் கட்சியின் தலைமையகத்தினுள் பலவந்தமாக பிரவேசித்த போதும், குறித்த நபர் தொடர்பான விபரங்களை வெளியிட மறுத்துள்ளனர்.
பொலிஸாரின் அத்துமீறிய நடவடிக்கை
வௌ்ளவத்தை மற்றும் மிரிஹான குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசின் இரண்டு வாகனங்களில் வந்த பொலிஸாரே இவ்வாறு அத்துமீறிப் பிரவேசித்துள்ளனர்.
பொலிஸார் வருகை தந்த போது கட்சியின் தலைமையகத்தினுள் ஊடக மாநாடு ஒன்று நடைபெற்றுள்ளது.
பொலிஸாரின் அத்துமீறிய செயற்பாட்டை கட்சி உறுப்பினர்கள் கண்டிக்கத் தொடங்கிய பின்னர் பொலிஸார் தாம் தேடி வந்தவர் அங்கு இல்லை என்று கூறி திரும்பிச் சென்றுள்ளதாகவும் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam