கிளிநொச்சி பொலிஸாருக்கு எதிராக போராட்டம்
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸார் தாக்குதல்தாரிகள் சிலருக்கு ஆதரவாக இருப்பதாக கூறி சிவசேனா அமைப்பினர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது நேற்று (13) மாலை கிளிநொச்சி நகர் பிள்ளையார் ஆலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சியில் அண்மையில் இந்து மதகுரு ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு அவரது உருத்திராட்ச மாலை அறுத்தெறியப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதி கோரியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் அசமந்த போக்கு
இதன்போது தேங்காய் உடைத்து தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை மதகுருமார்கள் மேற்கொண்டிருந்தனர்.
கிளிநொச்சியில் அண்மைக்காலமாக சில அடாவடியான செயற்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது என்றும் இது போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பதில் அசமந்த போக்குடன் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், போராட்டக்காரர்கள் தாக்கப்பட்டவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையம் சென்ற போது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டவருடன் சமரசத்துடன் செல்லுமாறு கோரியுள்ளமை வேதனையான விடயம் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மதகுமார்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
