மேல் மாகாணத்தில் பொது மக்கள் பின்னால் சுற்றி திரியும் பொலிஸார்
மேல் மாகாணத்தில் மக்கள் உரிய முறையில் சுகாதார பாதுகாப்பினை பின்பற்றுகின்றார்களா என ஆராய்வதற்கு பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதற்கமைய பேருந்துகளின் இருக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது, முகக் கவசம் அணிதல், ஏசி பொருத்திய பேருந்துகள் தொடர்பிலும் வர்த்தக நிலையத்தினுள் நுழைய கூடிய நபர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதற்கான விளம்பரங்கள் பதிவிடப்பட்டுள்ளதா என பொலிஸார் சோதனையிட்டு வருகின்றனர்.
நேற்று பிற்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியினுள் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ள 451 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது சுகாதார வழிமுறைகளை மீறி செயற்பட்டவர்களை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில் பலரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.



