போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக பொலிஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டு
போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக போலீஸ் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
வரவு செலவு திட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்றைய தினம் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை பிரதேசத்திற்கு பொறுப்பான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதைப்பொருள் வர்த்தகத்தை ஊக்குவிப்பதாக அவர் நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி போதைப்பொருள் வர்த்தகர்களுடன் இணைந்து செயல்படுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அண்மையில் வெளியான குரல் பதிவு ஒன்றின் மூலம் இந்த விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விடுதி ஒன்றின் உரிமையாளருக்கு அழைப்பை ஏற்படுத்தி ஆறு பேர் குறித்த விடுதிக்கு வருவதாகவும் அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறும் கோரும் குரல் பதிவு வெளியாகி உள்ளது என முன்னாள் அமைச்சர் ரிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
பண கொடுக்கல் வாங்கல் தொடர்பிலும் இந்த உரையாடலில் இடம் பெற்றுள்ளது எனவும் அடுத்த மாதத்திற்கான கொடுப்பனவு இப்போது செலுத்தத் தேவையில்லை ஐம்பதாயிரம் ரூபா செலுத்துங்கள் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விடுதி உரிமையாளரிடம் பேசிக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பொலிஸஸார் மற்றும் இராணுவத்தினர் குற்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து அம்பலப்படுத்துமாறு அரசாங்கம் கூறியதாகவும் அதன் அடிப்படையில் தான் இந்த தகவல்களை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது அவர்களுக்கு உடந்தையாக செயல்படுகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த தகவல்களை வழங்கியமைக்கு நன்றி எனவும் இது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam